03-OCT-17
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

கருவிகளையும் ஆயுதங்களையும் வழிபடும் இந்நாளில் நம்மை முன்னேற்றப்பாதையில் வழிநடத்த இருக்கும் "DIGITAL அணுகுமுறையை" வழிபட ஆசைப்படுகிறோம்
GST-ன் வருகையால் உங்களின் வணிகம் நடத்தும் முறையில் சிரமங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று நான் அறிவேன். கடந்த 3 மாதங்களாக GOFRUGAL Assure Care, Digital முறையில் உங்களுக்கு சேவை செய்து கொண்டிருப்பதால் மேலும் சில கஷ்டங்கள் இருந்திருக்கலாம். GST மாற்றத்தின்போது உங்களுடைய இந்த ஒத்துழைப்பிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
"GST பதட்டங்கள் குறையத்தொடங்கியதின் காரணத்தால், GOFRUGAL தொலைபேசி மற்றும் Remote support சேவையை துவக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது"நம் இருவரின் வணிகங்களையும் எதிர்காலத்திற்கு தயார்படுத்த இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே இந்தத் தகவலை முழுமையாகப் படித்து உங்களின் கருத்தினைப் பகிரவும்
நம்மைச்சுற்றி நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களை சுட்டிக்காண்பித்து, நம் வணிகங்களுக்கு Digital அணுகுமுறையின் முக்கியத்துவத்தையும் தேவைகளையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். 1760களில் இங்கிலாந்தில் தொழில்புரட்சி ஆரம்பித்தது, இந்தியா 60 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தொழில்மயமாக்கப்பட்டது. மெக்ஸிகோவில் 1940களில் பசுமைப் புரட்சி துவங்கியபோது, 30 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தியா பசுமைபுரட்சியைத் தொடங்கியது. இதே போல் Computer, Internet,Mobile புரட்சிகள் இந்தியாவை முறையே 20, 10, 5 ஆண்டுகள் பின்தங்கி தான் வந்தடைந்தது.
Digital புரட்சி நம்மை புரட்டிப்போடத் துவங்கி விட்டது, உலகெங்கும் ஒரே நேரத்தில் ஒரு மாற்றம் நிகழ்வது இதுவே முதல் முறை.

இந்த சூழலலை கருத்தில்கொண்டு எங்களது தொலைபேசி மற்றும் Remote support சேவையை Oct 7ஆம் தேதிக்குள் மீண்டும் தொடங்க இருக்கிறோம். அதன் திட்டத்தைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்
எங்களது Annual License Renewal (ALR) இல் தொலைபேசி மற்றும் Remote support சேவை உள்ளடக்கம் ஆகாது. வாடிக்கையாளர்கள் 2,5 மற்றும் 10 மணி நேர Pre-paid Phone & Remote support package களை முறையே Rs.1500, Rs.3000 மற்றும் Rs.5000 ற்கு வாங்கிக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் DIGITAL முறையை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கவும், Digital support மூலம் வரும் நன்மைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் வகையிலும் எங்களது ALR தொகையில் 15% தள்ளுபடி செய்யவிருக்கிறோம். ஜூலை 1,2017 & அதற்குப் பிறகு ALR புதுப்பித்த வாடிக்கையாளர்கள், உங்கள் Digital support காலத்தை நீடித்துக்கொள்ளலாம் அல்லது தொலைபேசி+Remote support வாங்கும்போது credit பெற்றுக்கொள்ளலாம்.தொலைபேசி மற்றும் Remote support பெரும் நேரம் சரியான முறையில் அளவிடப்பட்டு உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
"மிகக் குறைவான support தேவைகள் உள்ள மென்பொருளை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்ப்பதே எங்களின் குறிக்கோளாகும். Support தேவைப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் தாங்களே சேவை செய்துகொள்ளும் வகையில் Videos பகிர்ந்துகொள்ள விருப்பப்படுகிறோம்."எங்களது Assure care team, உங்களது myGOFRUGAL ticket மற்றும் Live Chat இல் எப்பொழுதும் பதிலளிக்கத் தயாராக இருக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த முதலீட்டில், சிறந்த சேவைகளைப் பெறலாம். GOFRUGAL இன் 50% ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் Digital முறையை ஏற்றுக்கொண்டு சேவைபெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். Digital முறையை ஏற்றுக்கொள்ள இன்னும் நேரம் எடுத்துகொள்ள ஆசைப்படுபவர்களுக்கு Pre-paid தொலைபேசி&Remote support சேவைகளை அறிமுகப்படுத்துகிறோம். இந்த சேவைகளின் கட்டணங்கள் வெளிப்படையாக வாடிக்கையாளர்களை Digital முறையைத் தேர்ந்தேடுக்க வழிவகுக்கும் என நம்புகிறேன்
கடந்த 2மாதங்களாக எங்களின் software மேம்பாடுகள், முன்னேற்றங்களை எண்ணிப் பார்க்கும்போது புத்துணர்ச்சி அளிக்கிறது, நீங்களும் அதை உணர்கிறீர்கள் என நம்புகிறேன். இந்த புதிய Assure care package மூலம் எங்களிடம் இருந்து சிறந்த சேவையை எதிர்ப்பார்க்கலாம்
Digital அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்து மகிழ்ச்சிகரமான அனுபவத்தையும் கூடுதல் லாபத்தை எட்டுவோம்!
years of
specialization
customers
businesses
countries
strong field
presence