GST

அன்பார்ந்த வாடிக்கையாளரே, வணக்கம் !

தங்கள் வணிகத்தை ஜிஎஸ்டிக்கு மேம்படுத்தியுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வாழ்த்துக்கள். ஜிஎஸ்டிக்கு மாறுவதற்கு இன்னும் சிரமப்படும் அனைவருக்கும் உதவ நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். ஜிஎஸ்டிக்கு விரைவில் மற்றும் சுமூகமான முறையில் மாறுவதற்கு மிகவும் முக்கியமான தகவல்கள் இருப்பதால், இந்த செய்தியை முழுமையாகப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை ஜிஎஸ்டிக்கு மாறுவதற்கு GOFRUGAL இன் 6 டிஜிட்டல் கருவிகளுடன் தொடர்பு கொண்ட 1000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் உரையாடல்களை , கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்த போது , ஒன்று தெளிவாகியது. முன்னரே எங்கள் தொடர்புகளின்படி ஜி.எஸ்.டி மேம்பாட்டின் ஒவ்வொரு படியிலும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டவர்களால் ஜூலை 1 ஆம் தேதி 2017 ஜி.எஸ்.டிக்கு மாறுவது சுமுகமாக இருந்தது .

  • 1.சமீபத்திய patch update செய்வதால், ஒவ்வொரு பின்தொடரும் மேம்படுத்தல் விரைவாக செய்யப்படும்
  • 2.GST செயலாக்கத்தில் படிப்படியான செயல்முறை
  • நிலை1 - மாஸ்டர் மேம்படுத்தல்
  • நிலை 2 - Practice mode பிரயோகித்தல் மற்றும் Print Profile சோதனை செய்தல்
  • நிலை 3 - ஜிஎஸ்டிக்கு மேம்படுத்துதல்

3. Chitti, myGOFRUGAL பயன்பாடு ,Windows Push Notifications பயன்படுத்துவதன் மூலம் மற்றும் Free Online Training Webinar இல் பங்கேற்பதன் மூலம் GOFRUGAL உடன் ஈடுபடுத்திக்கொள்ளுதல்

உங்கள் எல்லாருக்கும் தெரியும் , ஜிஎஸ்டி என்பது மற்றொரு patch update அல்ல, patch update மட்டும் செய்து நீங்கள் ஜி.எஸ்.டி.யுடன் வியாபாரம் செய்யத் தொடங்க. ஒவ்வொரு வியாபார நிறுவனமும் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்குத் தங்கள் வரி ஆலோசகர்களின் உதவியுடன் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும் . GOFRUGAL உங்களுக்கான Self Help Videos தயாரிப்பதற்கும், Webinars ஐ சிறந்த முறையில் நடத்துவதற்கும் பெரிதும் முதலீடு செய்துள்ளது என்பதை கருத்தில் கொள்ளவும் . நீங்கள் GOFRUGAL இன் அனைத்து தகவல் தொடர்புகள் - எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல்கள் பெறுகிறீர்கள் என்று உறுதியளிக்கிறீர்கள், ஆனால் உங்களில் பலர் சந்தேகங்களைதெளிவுபடுத்தவும், பிரச்சினைகளை உரையாற்றவும் Webinar களில் பங்கேற்பதில்லை . Webinar காலெண்டரை மறுஆய்வு செய்து , உங்கள் GST மேம்படுத்தல் பயணத்தை விரைவுபடுத்தவும். GST க்கு மேம்படும் பயணத்தில் இப்போது நீங்கள் இருக்கும் நிலையை எங்களிடம் பகிர்தல் சிறப்பான முறையில் உதவ முடியும்

GOFRUGAL இன்றைய தினத்தை பின்தங்கியிருக்கிற 2500 வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் ஆரம்பித்துள்ளது . இந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் Chitti யால் வழங்கப்பட்ட தகவலுடன் தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொண்டிருக்க முடியும். Chitti வழங்கும் வீடியோவை பார்த்து, விஷயங்களைச் செய்வது அல்லது வழிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற செயல்முறைக்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் அடுத்த கேள்வியைக் கேட்கிறார்கள்.

நான், Chitti ஆகச்சிறந்தது இல்லை என்று ஒப்புக்கொள்கிறேன். சில நேரங்களில் உங்களை காத்திருக்க வைத்து பதில் அளிக்காமல் போகலாம் அல்லது பதில் அளிக்காமலேயும் இருக்கலாம். ஆனால் உங்கள் மொபைல் எண் கொடுக்கும்போதே, Chitti உங்களை அடையாளம் கண்டு , நீங்கள் இருக்கும் தற்போதைய பதிப்பை கொடுக்கவும், நீங்கள் உடனடியாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கொடுக்கவும் செய்யும். அவைகளை தவறாமல் பின்பற்றவும். Chitti உங்களுக்கு உதவியாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், Chitti உங்களுக்கு கண்டிப்பாக உதவும். 1000+ வாடிக்கையாளர்களின் உரையாடலை நான் ஆய்வு செய்ததில் , முதல் பதிலை Chitti 90% மிகவும் சரியாக அளித்துள்ளது. முதலாவது அறிவுறுத்தலை பின்பற்றாததால்தான் வாடிக்கையாளர்கள் தேவையான பதிலை பெற இயலவில்லை

ஜூலை1 அன்று 4000 வாடிக்கையாளர்களுக்கு மற்றும் ஜூலை 2 அன்று 2500 வாடிக்கையாளர்களுக்கு உதவியிருக்கிறோம் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு வழக்கமான நாளில், எங்கள் 24x7 Assure Care 300-400 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. எங்கள் குழு உறுப்பினர்கள் இந்த இரு நாட்களிலும் 700 வாடிக்கையாளர்களை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டனர் . எங்கள் அணி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு நாளும் 12-15 மணிநேர வேலை செய்து, outgoing calls ஐ வழக்கமான நாளை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளனர். இதை நாங்கள் உங்களுடன் பகிர்வதன் நோக்கம், நவீன தொழில்நுட்பம் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி உங்களுக்கு உதவ ஒரு திடமான திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்பதை தெரியப்படுத்தவே. உங்கள் வியாபாரத்திற்கும், வரவிருக்கும் நாட்களில் இந்த தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் தேவை. GOFRUGAL, உங்கள் வணிகத்தை நிர்வகிக்க, இந்த சிறந்த கருவிகள் அளிப்பதில் முன்னோடியாக இருக்கும்.

நான் முன்னர் தெரிவித்ததைப் போல, எங்கள் Assure Care குழு உறுப்பினர்களால் Chitti கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் உங்களுக்கு உதவுவதற்காகவும், Chittiயை உங்களுக்கு சேவை செய்ய உதவுவதற்காகவும், தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். இன்றிலிருந்து எங்கள் அணி உறுப்பினர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வார்கள் . உங்களுடன் உரையாடுவது Chittiயா அல்லது எங்கள் உறுப்பினரா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் சிறந்த அனுபவம் பெற எங்கள் Chittiயை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளோம்.

இது மட்டும் அல்லாமல் , எங்களுடைய field team எங்கள் 24x7 Assure care எண்ணிற்கு அழைத்து , Chittiக்கு வராமல் இருக்கும் 2,000+ வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்கள் SMS அல்லது மின்னஞ்சலை பார்த்திருந்து , தங்களுக்கு தாங்களே உதவி புரிந்து கொள்ள Chitti இடம் வந்திருந்தால் , GOFRUGAL இந்த வேலையை செய்ய வேண்டியதில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு உதவும் எங்கள் திறன் இன்னும் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கும்.

ஜிஎஸ்டிக்கு உங்கள் வணிகத்தை விரைவில் மேம்படுத்த நீங்கள் அனைவருமே ஆவலாக இருப்பீர்கள் என்று தெரியும். ஒரு தாழ்மையான வேண்டுகோள். நாங்கள் அனுப்பும் தகவல்களைப் படிக்கவும், அதில் நீங்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதைப் பார்க்கவும். எங்கள் வீடியோக்களைப் பார்க்கவும் (இது ஒரு மணிநேரம் மட்டுமே ஆகும்) மற்றும் உங்களுக்கு பொருத்தமான Free online training webinars இல் கலந்து கொள்ளவும் இன்று 50% க்கும் அதிகமான எங்கள் நேரம் மற்றும் ஆற்றல் வாடிக்கையாளர்களை Chittiக்கு கொண்டு வருவதற்கோ அல்லது அதே செய்தியை மீண்டும் மீண்டும் செய்வதற்கு செலவழிக்கப்படுகிறது.

உங்களுடைய இந்த செயல்கள் உங்களுக்கு இன்னும் சிறந்த முறையில் உதவி புரிய எங்களுக்கு உதவும்.

மற்றும் கீழ்காணும் கருத்துகணிப்பில் பங்கு கொள்ள வேண்டுகிறோம்

GST மாற்றம் பற்றிய கருத்துகணிப்பு

உங்களுடைய இந்த செயல்கள் உங்களுக்கு இன்னும் சிறந்த முறையில் உதவி புரிய எங்களுக்கு உதவும் . கருத்துகணிப்பில் நீங்கள் பதிவு செய்யும் பதில்கள், எங்கள் திட்டங்களை சிறப்பாக செய்து உங்கள் வணிகத்தை ஜிஎஸ்டிக்கு மேம்படுத்துவதற்கு சிறப்பான முறையில் உதவ முடியும்.

சிறந்த சேவைகளை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறோம்


  • என்றும் அன்புடன்,
  • குமார் வேம்பு,
  • தலைமை நிர்வாக அதிகாரி,
  • GOFRUGAL Technologies

15+
years of
specialization
25K+
customers
70+
businesses
70+
countries
600+
strong field
presence